வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போராட்டம் 

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் செம்மலை தலைமை தாங்கினார்.செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கிராம ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story