சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட மையம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் திருவேரங்கன், மாவட்ட செயலாளர் ஜான்ஆஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து நிலை காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.
கிராம ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.