தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோப்பு படம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னிவாடி வனப்பகுதி அருகில் உள்ள விளைநிலங்களை வன விலங்குகள் சேதப்படுத்து கின்றன. இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தொய்வு நிலவுவதாக கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கன்னிவாடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் எம்.ராமசாமி தலைமை வகித்தார்.
தலைவர் எம்.பெருமாள், மாநில நிர்வாகி வசந்தாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சக்திவேல், சங்க மாவட்ட பொருளாளர் தயாளன், தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். கன்னிவாடி ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு இல்லாததால் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 8 பெண்கள் உட்பட 99 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags
Next Story