திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு கேசவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக குடிநீருக்கு கூட காவிரி நீரை திறந்திட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும்,
அதற்கு துணை போகும் காவேரி ஒழுங்காற்று குழுவிற்கு கண்டனத்தை தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story