பேராவூரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பேராவூரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர் ஆர்ப்பாட்டம்
பேராவூரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிஜிட்டல் கிராப் சர்வே பணி குறித்தும், அது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தத்தை கைவிட வலியுறுத்தியும், விடுமுறை நாட்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களை பணி செய்ய நிர்பந்தம் செய்யக்கூடாது எனவும்,

டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புதிதாக பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவம் நிறைவு பெறாத மற்றும் விளம்புகை செய்யப்படாத கிராம நிர்வாக அலுவலர்களை வைத்து தொடங்கவும், மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் தொனியில் பேசும் போக்கை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு நிர்வாகி செல்வம் தலைமை வகித்தார். அருண் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

ரவிச்சந்திரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மகாலட்சுமி நிறைவுறையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 24 ஆண்கள் 9 பெண்கள் உள்ளிட்ட 33 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story