பிஎஸ்என்எல்.,க்கு சொந்தமான மரத்தை கடத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான மரத்தை வெட்டி, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தருமபுரி தொலைதொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான, ஓசூர் பகுதியில் உள்ள தொலை பேசி நிலையங்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட சந்தனம் , தேக்கு நீலகிரி மரம், வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை அனுமதி பெறாமலும் மற்றும் ஸ்க்ராப் பொருட்களையும் தனி நபர்களால், முறையான வழிமுறை பின்பற்றாமல் கொள்ளையடிக்க பட்டுள்ளது.

இந்த மரங்கள் வெட்ட எந்த அனுமதியும் வழங்காமல் விதிமுறைகள் பினபற்றாமல் மரம் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.மரம் வெட்டிய சம்பவம் குறித்து போதிய ஆதாரங்கள் எல்லாம் இருந்தும் இதுவரை முறையான விசாரணை மேற்கொள்ளாமல் மற்றும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே நிர்வாகத்திடம் உரிய விஜிலென்ஸ் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் மற்றும் கான்ட்ராக்டர் மீது உரியநடவடிக்கை மேற்கொண்டு பிஎஸ்என்எல்க்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாடடத்திற்கு ஏஐஜிஇடிஒஏ மாவட்ட தலைவர் ஆர்.ரமனா ,பிஎஸ்என்எல் இயூ மாவட்ட தலைவர் எம்.பருதிவேல் ஆகியோர் தலைமைவகித்தனர். பிஎஸ்என்எல் இயூ மாவட்ட செயலாளர் பொன்.கிருஷ்ணன்,மாநில அமைப்பு செயலாளர்ஜி.உமாராணி, ஏஐஜிஇடிஒஏ, மாவட்ட செயலாளர் பி.பிரபாகரன் ஆகியோர் சிறப்புறையாற்றினார்

Tags

Next Story