வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம்

வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மார்க்கெட் கமிட்டி முன்பு தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் கிராமப்புற பொருளாதார வீழ்ச்சி காரணமாகவே சென்னை நோக்கி 50 லட்சம் நபர்கள் இடம் பெயர்வு நடைபெற்றது .இதனால் நீர்நிலைகள் குடியிருப்பாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே பெருமழையால் சென்னை மூழ்கி கிடக்கிறது. தமிழகத்தில் ஆண்டு மூலதன செலவு ரூபாய் 35 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. இதில் வேளாண் துறைக்கு மட்டும் இரண்டு சதவீதம் ஒதுக்குவதால் விவசாயம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

எனவே விவசாயிகளுக்கு பேரிடர் நிதி எக்டருக்கு 13,500 என்பதை ரூபாய் 30 ஆயிரமாக உயர்த்தியும், பயிர் காப்பீடு அரசே ஏற்று நடத்தவும், மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் கௌரவ நிதி ரூபாய் 6,000 போல மாநில அரசு ரூபாய் 12,000 நிதி வழங்க வலியுறுத்தியும், ஆண்டு தோறும் ஓதுக்கப்படும் மூலதன செலவில் மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள், உலர் களம், டிபிசி குடோன்கள், பசுமை கிணறுகள், தடுப்பணைகள் கட்ட கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கிராமப்புற மக்கள் விவசாயத்தை கைவிட்டு சென்னை போன்ற இடங்களில் தினந்தோறும் பெயிண்டர், பிளம்பர், மேஸ்திரி, சித்தாள் என தினமும் ரூபாய் ஆயிரம் வருமானம் ஈட்டும் தொழிலை நம்பி செல்வதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது இதனை போக்க விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி மண்வெட்டி, பால் டப்பா,கயிறு போன்றவற்றை தரையில் வீசி எரிந்தும் ,கையில் ஸ்பேனர் ,சுத்தி திருப்புளி, பெயிண்ட் பிரஸ் உள்ளிட்டவற்றை கையில் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags

Next Story