குமாரபாளையத்தில் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்  

குமாரபாளையத்தில் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்  

ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்  நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் போனஸ் வழங்க அரசு சார்பில் அரசானை இட்டு உத்திரவாதம் செய்கிறது. ஆனால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இதுவரை போனஸ் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 20 சதவீதம் போனஸ் கேட்பது என முடிவு செய்து, இரு நாட்கள் முன்பு தெருமுனை பிரச்சாரம் நகரம் முழுதும் நடத்தப்பட்டது.

நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் கோரிக்கை மனு தாசில்தார் சண்முகவேல் வசம் கொடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கி தரவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலர் அசோகன், மாவட்டதலைவர் மோகன், நகர செயலர் பாலுசாமி, நகர பொருளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story