சாலை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

X
சாலைகளை சீரமைக்க கோரிக்கை
அன்னதானப்பட்டியில் இளைஞர் பெருமன்றத்தினர் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம், அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அருகே, தாதகாப்பட்டி உழவர் சந்தை செல்லும் சாலையில், புது திருச்சி கிளை ரோடு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலைகள் மோசமாக உள்ளன எனவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், போலீஸ் நிலையம் அருகே ஆண்டுக்கணக்கில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.
Next Story
