வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், சென்னை வழக்கறிஞர் கௌதமன் படுகொலை சம்பவத்தை கண்டித்தும் தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனசேகர் டேவிட் தலைமை வகித்தார். இதில், செயலாளர் செல்வின், இணைச் செயலாளர் ஜஸ்டின், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீநாத் ஆனந்த், தமிழ்செல்வி, கார்த்திகேயன், ரமேஷ் செல்வகுமார், பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, வழக்கறிஞர்கள் சின்னதம்பி, சுரேஷ்குமார், கார்த்திகேயன், மரிய தாமஸ், ஐயனார், உட்பட 100க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி நாளை வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story