சிஐடியு நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
சிஐடியு சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மனு அளிக்கப்பட்டது.
சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு சி ஐ டி யு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதில் பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பில் தள்ளு வண்டிகள் மற்றும் சாலையோர கடைகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், பெரம்பலூர் நகராட்சியில் வெண்டர் கமிட்டியை கூட்டாமல் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை ஏதும் நடத்தாமல் தன்னிச்சையாக இது போன்ற அறிவிப்புகள் மூலம் சாலையோர கடைகளை உடனடியாக அகற்ற துன்புறுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. என்றும், பெரம்பலூர் நகரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்றுவதற்கு பெரம்பலூர் நகராட்சி நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடிய வகையில் சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் பாதுகாப்புச் சட்டம் 2014-ன் படி சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க கோரியும் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து இதற்கான கோரிக்கை மனுவினை நகராட்சி ஆணையில் இடம் வழங்கினார்கள்,இந்நிகழ்ச்சியின்போது சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், பொருளாளர் ரங்கராஜ், நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், மாவட்ட துணைசெயலாளர் செல்லத்துரை, கிளை செயலாளர்கள் மணி, சின்னதுரை உள்ளிட்ட சாலையோர வியாபாரிகள் பலர் கலந்துரையாடல் கொண்டனர்.
Tags
Next Story