கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம்: ஐந்து பேர் கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம்: ஐந்து பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

கோவையில் Myv3 ads ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் myv3 ads நிறுவனம் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 10ஆம் தேதி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் நிறுவனர் மட்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள நபர்களை போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு MyV3 விளம்பர நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும் My V3 உரிமையாளர் சக்தி ஆனந்தை விடுவிக்க வலியுறுத்தியும் My V3 விளம்பரங்களுக்கு ஆதரவாக ஐந்து பேர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடமையைச் செய்யவிடாமல் தடுத்து பொது அமைதிக்கும்,

வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவையை சேர்ந்த விநாயகமூர்த்தி, கணேசன்,பிரவீன் அருள்மணி,சிவனந்த பெருமாள் ஆகிய 5பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story