மேட்டூர் அனல்மின் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.

மேட்டூர் அனல்மின் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.

மேட்டூர் அனல்மின் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.


சேலம் மாவட்டம்,மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவாயில் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய தலைமை அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு முடிவின்படி மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், கூட்டமைப்பின் சார்பாக மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவாயிலின் முன்பு எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரியத்தில் 32,000 க்கு மேற்பட்ட ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும், நுகர்வோருக்கு தரமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை ஒன்று மற்றும் இரண்டு ஆம் பணி தொகுதி அலுவலர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். 01.12.2019க்கு பிறகு 16.5.2023 வரை பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் 6% ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டபடி வழங்கிட வேண்டும்,

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அலவன்சுகளுக்கு அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தையை துவங்கிட வேண்டும். போனஸ் தனிச்சையான அறிவிப்பினை இனிவரும் காலங்களில் முறையான சங்கங்களின் பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும் ஒப்பந்தத்திற்கு எதிரான நடைமுறைப்படுத்த முயலும் ஈ டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மேட்டூர் அனல் நிலைய நுழைவாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story