சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின் ஊழியர்கள் எம்பிளாயீஸ் பெடரேசன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர்கள் எம்பிளாயீஸ் பெடரேசன் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 1.12.2019 முதல் 16.5.2023 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு மறுத்ததை உடனே வழங்கிட வேண்டும். ஈட்டிய விடுப்பு பணமாக்கும் முறையை திரும்ப அளித்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். 56,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பகுதி நேர பணியாளர்களை பிரிவு அலுவலங்களில் பணியமரத்திட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story