விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

டெல்லியில் கடந்தாண்டு போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத, மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பிப். 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதில், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2023-ஐ ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கக் கூடாது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்க கூடாது. தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து, கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டமும்,

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. தஞ்சாவூர் ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூரில் மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் 125 பேர் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறி,

ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர்

என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில், மத்தியில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகள் நிறைவு செய்கிற நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை, அன்றாடம் வாழ்க்கைக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டங்கள் சுருக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

மத சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இந்திய அரசியல் சாசன சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தத்தில் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத போக்கை மத்திய அரசாங்கம் கடைபிடிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து, தலைமை அஞ்சலகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 125பேரை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர். பேராவூரணி பேராவூரணி பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் மூத்த தோழர் வீ.கருப்பையா தலைமை வகித்தார்.

காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் இளங்கோ, சேக் இப்றாகிம்ஷா, விவசாயிகள் அணி கமால் பாட்சா, திராவிடர் விடுதலைக்கழகம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், சிஐடியு சலவைத் தொழிலாளர் சங்கம் நீலமோகன், மீனவர் சங்கம் பெரியண்ணன், நாகேந்திரன், விவசாயிகள் சங்கம் மாவட்டக்குழு ஜாக்குலின் மேரி, விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர்கள் சிதம்பரம், செந்தில்குமார், விவசாயத் தொழிலாளர் சங்கம் சேகர், இளங்கோவன்,

தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, கோ.ராமசாமி மற்றும் 8 பெண்கள் உள்ளிட்ட 58 பேர் கலந்து கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் சார்பில், பேராவூரணி ரயிலடி அருகே மாவட்ட துணைச் செயலாளர் துரை.பன்னீர்செல்வம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 3 பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சேதுபாவாசத்திரம், பெருமகளூர், பள்ளத்தூர், மந்திரிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது. பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பக்கிரிசாமி, திமுக பன்னீர்செல்வம், மதிமுக செந்தில்குமார், காங்கிரஸ் வழக்குரைஞர் ராமசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சக்ரவர்த்தி, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 47 பேர் கைதாகினர். திருவையாறு திருவையாறு பேருந்து நிலையம் அருகே, பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எம்.ராம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா , விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் எம்.பழனி அய்யா கண்டன உரையாற்றினர். எம்.கதிரவன், ஆர்.பிரதீப் ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சக்கரவர்த்தி, இலங்கேசன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பூதலூர் வடக்கு பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில், திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகில், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே.காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.ச ஒன்றியச் செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூதலூர் தெற்கு பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழரசன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வியாகுலதாஸ் தலைமை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பி.மாரியப்பன், சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் கெங்கை பாலு, ஒன்றியப் பொருளாளர் அறிவழகன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எம்.காமராஜ், ஒன்றியப் பொருளாளர் பழனிசாமி, சமவெளி விவசாயிகள் இயக்கம் பழனிராசன், மதிமுக ஒன்றியச் செயலர் நந்தகுமார், திமுக விவசாயிகள் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சைவராசு, திமுக விவசாயத் தொழிலாளர்கள் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சிவகுமார், காங்கிரஸ் அறிவழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலை வேந்தன், விவசாயிகள் சங்கம் சுந்தரவடிவேலு, சிஐடியு எம்.ஜி.சரவணன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரத்தநாடு ஒரத்தநாட்டில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் சு. கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் மோகன், சிஐடியு ஒன்றியத் தலைவர் கருணாநிதி, மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவோணம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.பி.எம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.வாசு, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் கோவிந்தராஜ் மற்றும் பல்வேறு கட்சி தோழர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அம்மாபேட்டை அம்மாபேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி தலைமை வகித்தார். வி.தொ.ச மாநிலச் செயலாளர் கே.பக்கிரிசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலர் ஏ.நம்பிராஜன் கண்டன உரையாற்றினர்.

வி.தொ.ச ஒன்றியச் செயலர் சேகர், ஒன்றியத் தலைவர் ரவி, விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் எஸ்.வி.கருப்பையன் மற்றும் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story