கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 பெரம்பலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது,

மாநில துணைத்தலைவர் கணபதி, மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட மகளிர் செயலாளர் வசந்த பிரியா, தலைமையிடச் செயலாளர் ராமன், ஆகியோர் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கலைவாணன் வரவேற்புரை ஆற்றினர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிலம்பரசன் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கை 309 இல் வாக்குறுதி அளித்தபடியும், மேலும் தமிழக முதல்வரின் தொடர் வாக்குறுதியின் படியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்திட வேண்டும், ஈஎம் ஐ எஸ் (EMIS) பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து, கற்பித்தல் பணியினை முழுமையாக செய்திட வாய்ப்பு அளிக்க வேண்டும்,

காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெறுவதற்கு தடையாக உள்ள ஆணைகளை ரத்து செய்து உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும், 2009 க்கு பிறகு பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை கலந்திட வேண்டும், ஆசிரியர்களுக்கு தனியாக பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும், அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

Tags

Next Story