குருந்தன்கோட்டில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் செயல்விளக்கம்

குருந்தன்கோட்டில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் செயல்விளக்கம்

 ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 

குருந்தன்கோட்டில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் செயல்விளக்கம். வேளாண் மாணவிகள் பங்கேற்பு.
வேளாண்மைத்துறையில் நடப்பாண்டு முதல் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் செயல் விளக்கத்தில் நெல் முக்கியமாகச் சாகுபடி செய்யும் கிராமங்களில் அமைக்கப்படவுள்ளது. குமரி மாவட்டம் குருந்தன்கோடு வட்டாரத்தில் ஆளூர் கிராமம் பிராந்தனேரி பகுதியில் 5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்ட இச்செயல் விளக்கத்தில், நெல் வயல்களில் வயல் பரப்பில் உளுந்து சாகுபடி செய்யும் செயல்விளக்கம் வேளாண்மை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜென்கின் பிரபாகர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தி, வேளாண்மை அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ராதாபுரம் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பானு பிரியா, ஜோஷ்னா, காவ்யதர்ஷினி, கிருஷ்ணவேணி, நிவேதா, ராகினிகரசி, சந்தனமாரி ஆகியோர் செயல் விளக்கம் செய்து காட்டினர். வயல் வரப்பில் உளுந்து பயிரிடுவதால் களைகள் கட்டுப்படுவதோடு, நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டுகள் அதிக அளவு உற்பத்தியாகி நெல் வயலில் தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது என வேளாண்மை கல்லூரி மாணவிகள் விளக்கினர். மேலும் பூச்சிமருந்து செலவினம் குறைவதோடு உபரி வருமானமும் கிடைக்கிறது என்றனர். பிராந்தனேரி பகுதியைச் சார்ந்த விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் பிரபாகரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story