கொள்முதல் நிலைய ஊழியர்களை ஆர்ப்பாட்டம்

கொள்முதல் நிலைய ஊழியர்களை ஆர்ப்பாட்டம்
X

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பருவகால கொள்முதல் நிலைய ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தஞ்சை மண்டலம் சிஐடியு சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 20 விழுக்காடு தீபாவளி பண்டிகைக் கால போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும். கூலி சிப்பத்திற்கு 30 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இ.பி.எப், இ.எஸ்.ஐ பிடித்தம் செய்ய வேண்டும். பணியிடத்தில் மரணமடையும் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பருவகால கொள்முதல் நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி, நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் பேசினார். சுமைப் பணி சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, ஏ.ராஜா, சாய்சித்ரா, சுமைப் பணி சங்க மாவட்ட பொருளாளர் சாந்தகுமார், நுகர் பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கண்ணன், பால்ராஜ், லூகாஸ், கோவிந்தராஜ், ஜெகன், தெற்கு நத்தம் திலகர், கோவிலூர் ராஜ்குமார், புதூர் ரவிச்சந்திரன், ஆழிவாய்கால் பிச்சை கொல்லாங்கரை சந்திரசேகர், சேமிப்பு கிடங்கு செயலாளர் சசிகுமார், டாஸ்மாக் குடோன் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர்கள், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.

Tags

Next Story