திருப்பூரில் தனிநபர் மீது வன்கொடுமை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் தனிநபர் மீது வன்கொடுமை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொது மக்களை தனிநபர் ஒருவர் அடியாட்களைக் கொண்டு மிரட்டி போலி பத்திரம் தயார் செய்துள்ளதாக தனி நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

80 ஆண்டுகளுக்கு மேலாக வாசித்து வரும் பொது மக்களை தனி நபர் ஒருவர் அடியாட்களை கொண்டு மிரட்டி போலி பத்திரம் தயார் செய்து உள்ளதாகவும் -- தனி நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் ராயபுரம் அனைமேடு பெத்திசெட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 80 ஆண்டுகளுக்கு மேலாக 150 கிகும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வீடுகள் கட்டி அப்பகுதியில் குடியிருந்து வரும் நிலையில்., தனியார் ஒருவர் போலி பத்திரம் தயார் செய்து இவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்.,

அதேபோல் அருந்ததிய மக்கள் என்றும் பாராமல் இழிவுபடுத்தும் வகையில் அடியாட்களை கொண்டு மிரட்டி காலி செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் ஒரு சிலர் இவர்களின் மிரட்டலால் வீடுகளை காலி செய்துள்ளதாகவும்.,

எனவே பொதுமக்களை அச்சுறுத்தி காலி செய்ய முயற்சியில் ஈடுபட்டுள்ள தனி நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story