நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
போராட்டம்
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியதவது,ரேசன்கடை பணியாளர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற பல போராட்டம் நடத்தியும் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை. அச்சங்கம் வைத்துள்ள கேரிக்கைகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.

தேர்தல் நடைமுறை உள்ள நிலையில் ரேசன்கடையில் இருப்பு குறைவிற்கு அபராதத்தை 2 முதல் 3 மடங்காக அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.தேர்தல் விதிமுறைகள் உள்ள நிலையில் புதிய சட்டங்களை விதிக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும். சரியான எடையில் பொருட்களை கொடுக்காமல் இருப்பு குறைவு என கூறக்கூடாது. சரியான எடையில் ரேசன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும்.

பொருட்கள் உள்ளீடு செய்வதற்கு புதிய மிஷின்களை வழங்க வேண்டும். வாரிசு வேலைகளை உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுதிறனாளி பணியாளர்களுக்கு எடையாளர்கள் நியமிக்க வேண்டும். பெண் பணியாளர்கள் பணியாற்றும் ரேசன் கடைகளிலாவது கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும். பணியாளர்களை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற சங்க நிர்வகிகளை அழைத்து பேசவேண்டும். இவ்வாறு கூறினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் சுகமதி, குமார், உமாசங்கர், தனசேகரன், ஜான்ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story