அரசு பொது சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு பொது சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் தருமபுரி மாவட்ட செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை தருமபுரி மாவட்ட செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறித்தி, தர்மபுரி மாவட்ட தலைவர் D. ராஜேஸ்வரி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கோரிக்கை வலியுறித்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஆண்டுகளாக காலியாக உள்ள 3,000 காலிபணியிடங்களை நிரப்புதல், ஆன்லைன் கட்டாயத்தை ரத்து செய்ய கேரியும், கூடுதல் பணியிடங்களுக்கு பொறுப்பு படி வழங்ககோரியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஆர்பாட்டம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் S. தமிழ்ச்செல்வி உள்ளிட்ட கிராம ஆரம்ப சுகாதார செவிலியர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story