இந்து இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
வாசுதேவநல்லூர் அருகே இந்து இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் இந்து இளைஞர் முன்னணி சார்பாக தமிழகத்தில் போதை பொருட்கள் தலைவிரித்தாடுவதை கண்டித்து டி.என். புதுக்குடி பேருந்து நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் சிறப்புறை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாதவன், மதன்,மோகன் உள்ளிட்ட ஏராளமான இந்து முன்னணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
