விருதுநகரில் ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் சார்பாக அதன் மாநில செயலாளர் துரைச்சாமி பாண்டியன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகின்ற உயர்கல்வியில் இட ஒதுக்கீடு கட்டணமில்லா ஆங்கில வழிக் கல்வி உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் தமிழக அரசு வழங்கிட வேண்டும் அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து கல்வித்துறை அலுவலகங்களில் ஆசிரியர் அலுவலர்களின் பணப்பயன் மற்றும் இதரகோப்புகள் தேங்கி கிடப்பதாகவும் உரிய காலத்தில் பண பலன்கள் கிடைப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


