மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நல பேரவை சார்பாக ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டையை சேர்ந்த மகாலிங்கம் என்பவரை முன்விரோதம் காரணமாக சக்திவேல், சிரஞ்சீவிகுமார், அஜித் குமார், விக்னேஷ், லட்சுமணன்,சதீஸ் உள்ளிட்ட 6 நபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 16.9.23 அன்று உயிரிழந்தார். இந்நிலையில் மகாலிங்கம் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்து, அவரது குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலபேரவை சார்பில் மாநில பொதுச் செயலாளர் சண்முகவேல் தலைமையில் கருப்பையா தேனி மாவட்ட தலைவர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் செல்வம்,இளைஞரணி செயலாளர் முரளி தேனி மாவட்ட பொருளாளர் சுமதி தேனி மாவட்ட செயலாளர் ஈஸ்வரி பரமன் தமிழ்நாடு சலவை தொழிலாளி துணைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story