சிஐடியு சார்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டம்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இந்திய தொழிற்சங்க மையமான சிஐடியு சார்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சி ஐ டி யு மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில், 1982 ம் ஆண்டு முதல் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயக்க கூலி தொழிலாளர்கள் நாகூரான், அஞ்சான் , குணசேகரன், மற்றும் 1946 இல் வெள்ளையர் ஆட்சியில் மலபார் போலீசின் துப்பாக்கி குண்டுக்கு பலியான பொன்மலை தியாகிகள் ராஜு, தங்கவேல், ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன், மற்றும் 2013இல் தொழிற்சங்க நடவடிக்கையால் கொலை செய்யப்பட்ட சுமப் பணி சங்கத் தலைவர் அன்பழகன், ஆகியோர்களுக்கு தியாகிகள் தினத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது,
இதனை தொடர்ந்து முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையத்தை உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச சம்பளம் மாதம் 26 ஆயிரம் வழங்க வேண்டும், அனைவருக்கும் சமூக பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த அவுட்சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும், முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தப்பட்ட தொழிலாளர் நல சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து கோஷமிட்டு கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், கிருஷ்ணசாமி, வரதராஜ், உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர் இறுதியாக நிகழ்ச்சியில் மாட்ட பொருளாளர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.