ஜாக்டோ ஜியோ சார்பில் நவம்பர்-1ல் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ சார்பில் நவம்பர்-1ல்  ஆர்ப்பாட்டம்
X

ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ வேலூர் மாவட்டத்தின் சார்பில் நவம்பர்-1ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டி.டி.ஜோஷி, ஆ.சீனிவாசன்,ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ.சேகர், துரை.கருணாநிதி எஸ்.காந்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைணப்பாளர் ஜி.சீனிவாசன் வரவேற்று பேசினார். இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், வேலு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆர். எஸ்.அஜிஸ்குமார் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெ.இளங்கோ தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சுந்தர், மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத்தலைவர் வாரா தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாவட்ட நிர்வாகி கிருஷ்ணன் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்க செயலாளர் சங்கர், உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சியில் நடைபெற்ற மாநில உயர்மட்ட குழுவின் முடிவின்படி வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 01.11.2023 மாலை 5 மணிக்க மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் இதில் பெரும் திரளான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 1. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 2. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம். 3. இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். 4.முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள், ஆகியோடருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் மேல்நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். 5. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட 9-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட முடிவெடுக்கப்பட்டது.

Tags

Next Story