கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை அருகே நடுத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் எதிரில் கீழக்கரை பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் இணைந்து இஸ்ரேல் போர் விதி முறைகளை மீறி பாலஸ்தீனத்தில் குழந்தைகள் பெண்கள் பொதுமக்களை கொன்று குவிப்பதை கண்டித்தும் இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கு உதவி கரம் நீட்டி ஐ.நா.சபையில் குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான குழந்தைகள் பாலஸ்தீனம் கொடி வர்ணத்தை முகத்தில் வரைந்து கண்டனத்தை தெரிவித்தனர். ஜமாஅத் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஹபீபு நைய்னா கிராத் ஓதி துவங்கி வைத்தார். முகமது ஜலில் தொகுத்து வழங்கினார்.முகமது பரூஸ், பாஸித் இலியாஸ், சுல்தான் சிக்கந்தர், ஹமீது பைசல், பாரூக் ராஜா ஆகியோர் கண்டனம் கோஷம் எழுப்பினர். கீழை பிரபாகரன்,ரெமிஜியஸ், ஜஹாங்கீர் அரூஸி ஆலிம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

புதுப்பள்ளி வாசல் கத்தீப் மன்சூர் அலி நூரி சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக அனைத்து உலமாக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர். முடிவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அஸ்கர் நன்றி கூறினார்.

Tags

Next Story