அமரன் படத்தை தடை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டையில் அமரன் படத்தை தடை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டையில் அமரன் படத்தை தடை செய்யக்கோரி கமலஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் உருவப் படத்தை எரிக்க முயன்றதால பரபரப்பு ஏற்பட்டது புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா தலைமையில் சிறுபான்மை மக்களை தவறாக சித்தரிக்கும் அமரன் படத்தை தடை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அமரன் படத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து சிறுபான்மை மக்களை தவறாக சித்தரிக்கும் படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் உருவப்படத்தை அக்கட்சியினர் எரிக்க முயன்றனர். அப்போது கணேஷ் நகர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.