பாக்ஜலசந்தியில் தங்கு கடல் மீன் பிடிப்பதை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் 

பாக்ஜலசந்தியில் தங்கு கடல் மீன் பிடிப்பதை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

அதிராம்பட்டினத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பாக் ஜலசந்தி கடல்பகுதியில், நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் தங்கு கடல் மீன் பிடிப்பதை தடை செய்யக் கோரி, தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கம் (ஏஐடியுசி) சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே, தலைமையில், நாட்டுப் படகு மீனவர் சங்க மாவட்டச் செயலர் காளிதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், "நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் விசைப்படகு மீனவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாக் ஜலசந்தி கடற் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, அரிவலை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதனை பயன்படுத்தும் விசைப்படகுகளை பறிமுதல் செய்யக் கோரியும், நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள், தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் தங்கு கடல் மீன் பிடிப்பதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். பல முறை வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்காத மீன்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி நாட்டுப் படகு மீனவர் சங்க மாநில பொதுச் செயலாளர் சின்னத்தம்பி,

ஏஐடியுசி மாநிலச் செயலாளர் தில்லைவனம், தஞ்சை மாவட்ட தலைவர் சேவையா, கட்சி பொறுப்பாளர்கள் நாகரத்தினம், நடராஜன், மோகன் தாஸ், மீனவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story