கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கள்ளக்குறிச்சியில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சியில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஓய்வுபெற்றோர் பிரிவு செயலாளர் தண்டபாணி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்குதல், அரசு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்துதல். அரசுத்துறையில் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை தடை செய்தல், அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பல்வேறு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வட்டார செயலாளர் சீனுவாசன், வட்ட தலைவர் பாலமுருகன், நிர்வாகிகள் அகிலாண்டேஸ்வரி, தமிழரசி, செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story