சேலத்தில் கனிம வளங்களை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்
சேலத்தில் கனிம வளங்களை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்
சேலத்தில் கனிம வளங்களை பாதுகாக்க கோரி இயற்கை பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
ஏரி இயற்கை பாதுகாப்பு சங்கம் தலைவர் ஜெயராமன் தலைமையில் பனமரத்துப்பட்டி ஒண்டிக்கடை, கோம்பை காடு பகுதி விவசாயிகள் சேலம் கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமான சுற்றுச்சூழலை பாதுகாக்கும் காடு, மலைகள், பூமியில் உள்ள கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே, உரிமங்களை ரத்து செய் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வள திருட்டில் உடந்தையாக இருந்து லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுங்கள். கனிமவளங்கள் எடுப்பதற்கான சட்ட விதிகளை மீறி 200 அடி ஆ ழத்திற்கு சேலத்தில் கனிம வளங்களை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம். கொள்ளையடிக்கும் கிரஷர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். மனிதர்களுக்கும், விவசாயத்திற்கும், ஆடு மாடுகளுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கிரசர் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இதனை பார்வையிட்டு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Next Story