அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் - பா.ஜ.க.,வினர் கைது!
தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் அயலாக பிரிவு நிர்வாகியாக இருந்த சாம் பிட்ரோடாவை கண்டித்து அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் அயலாக பிரிவு நிர்வாகியாக இருந்த சாம் பிட்ரோடா தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.இதற்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க., சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் பா.ஜ.க., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் பா.ஜ.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் நிர்வாகி கருத்துக்கு எதிராக கோஷமிட்டனர். அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜ.க., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட 29 பேர் ஊட்டி மத்திய பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story