டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கூவனத்து பஞ்சாயத்துக்குட்பட்ட கவராயபட்டி பள்ளி குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கூவனத்து பஞ்சாயத்துக்குட்பட்ட கவராயபட்டி கிராமத்தில் பள்ளி குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் திரு. முனியப்பன் அவர்கள் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் முறைகள் மற்றும் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார். அதில் குறிப்பாக வெந்நீர் அருந்துதல், தன் சுத்தம், காய்ச்சல் வரும் பொழுது உடனடியாக பெற்றோர்கள் இடம் ஆசிரியர்களிடம் தெரிவித்து சிகிச்சை பெற அறிவுரைகளை வழங்கினார். மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் விதமாக விழிப்புணர்வு உறுதிமொழியை குழந்தைகளை ஏற்கச் செய்தனர்.

Tags

Next Story