டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

நாகை மாவட்டம், திட்டச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்டம், திட்டச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகை மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் சுகாதார பணிகள் விஜயகுமார் உத்தரவின் பேரிலும்,திருமருகல் வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் அறிவுறுத்தலின் பேரிலும் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.திட்டச்சேரி டாக்டர் ஜனரஞ்சனி முன்னிலை வகித்தார்.இதில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்தும் அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பின்னர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதில் சுகாதார ஆய்வாளர் பரமநாதன் மற்றும் செவிலியர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story