டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - ஆட்சியர் ச.உமா தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - ஆட்சியர் ச.உமா தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆட்சியர் ச.உமா தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ச.உமா தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திவ் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு போன்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. நீர் தேங்க கூடிய இடங்களில் தூய்மைபடுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் அதிகளவில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள தேவையான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தனிக்கவனம் செலுத்தி, மூன்று நாட்களுக்கு மேலாக தொடர் காய்ச்சல் இருந்தால் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொசு ஒழிப்பு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story