குழந்தைகளை பதம் பார்க்கும் டெங்கு

குழந்தைகளை பதம் பார்க்கும் டெங்கு

டெங்கு காய்ச்சல் 

திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் நேற்று 3 குழந்தைகள் உட்பட நால்வருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கும் டெங்கு பரவுவதால் இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியதால் ரோட்டோரங்கள் ,குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்'கொசுக்கள் உற்பத்தி செய்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி குழந்தைகளை குறி வைத்து டெங்கு காய்ச்சல் பரவுவதால் மக்கள் அச்சமடைந்தனர். தினமும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளே அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றும் 3 குழந்தைகள் உட்பட நால்வருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உச்சத்திற்கு செல்லும் அபாயம் உள்ளது. இதை தடுக்க பெற்றோர்களும் குழந்தைகளுக்கு தண்ணீரை கொதிக்க வைத்து கொடுப்பதோடு சுற்றுப்புறத்தில் கொசு பரவலை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

Tags

Next Story