டெங்கு இல்லாத தூத்துக்குடி மாவட்டம்: ஆட்சியர்

டெங்கு இல்லாத தூத்துக்குடி மாவட்டம்: ஆட்சியர்

டெங்கு தடுப்பு களப்பணிகளில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.


டெங்கு தடுப்பு களப்பணிகளில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு தடுப்பு களப்பணிகளில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (27.05.2024), டெங்கு நோய் தடுப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர், "மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு களப்பணியாளர்களின் வருகையை வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.

29.05.2024; புதன் கிழமை அன்று அனைத்து வட்டாரங்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், டெங்கு தடுப்பு பணி ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் நடத்திட வேண்டும். டெங்கு தடுப்பு பணிகள் அறிக்கைகள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். டெங்கு பணியாளர்களின் ஊதியம் வழங்குவதற்கு முன் வருகை பதிவை உறுதி செய்த பின்னரே ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

தற்போது கோடை மழை பெய்துள்ள நிலையில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலைகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் காரணிகளான சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்கள், டயர், காப்பி/டீ கப்புகள், உடைந்த சிமெண்ட தொட்டிகள், டிரம்கள் அப்புறப்படுத்தி கொசுப்புழு உற்பத்தியாவதை கட்டுபடுத்திட வேண்டும். இந்த பணிகளை பொது சுகாதாரத்துறை உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்திட அறிவுறுத்தினார். மேலும் டெங்கு தடுப்பு களப்பணிகளில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் எஸ்.பொற்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story