சுகாதார சீர்கெட்டால் டெங்கு - பொதுமக்கள் வைத்த கோரிக்கை

சுகாதார சீர்கெட்டால் டெங்கு - பொதுமக்கள் வைத்த கோரிக்கை

உலகம் பட்டு ஊராட்சியில் சுகாதார சீர்கேட்டால் இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் ஆணையாளரிடம் மனு

உலகம் பட்டு ஊராட்சியில் சுகாதார சீர்கேட்டால் இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் ஆணையாளரிடம் மனு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் உலகம்பட்டு ஊராட்சியில் கடந்த மிக் ஜாம் புயல் கனமழையால் கிராமம் தோறும் மழை நீரும் கழிவு நீரும் இணைந்து கொசு உற்பத்தி ஏற்படுத்தி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக தூய்மை பணியாளர்கள் ஒரு ஜங்கமர் வசிக்கும் பகுதியில் தூய்மை பணியாளர்கள் அறவே செய்வதில்லை. இதனால் கிராமத்தில் புகழேந்தி என்கிற இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் இளங்கோ மற்றும் பொதுமக்கள் இணைந்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இந்திராணியிடம் தங்களுடைய பகுதிக்கு சுகாதார சீர்கேட்டை சீரமைத்துமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

Tags

Next Story