டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு!

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு!

சுகாதார அதிகாரிகள் ஆய்வு 

கருங்குளம் வட்டாரத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில், கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லநாடு ,அராபாத் நகர், கருங்குளம் மற்றும் வடக்கு காரசேரி பகுதிகளில் இன்றைய தினத்தில் டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்றது. இதில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மருத்துவ அலுவலர் கிருஷ்ணவேணி ஆய்வு செய்தார்.ஆய்வின் போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

மருத்துவ அலுவலர் கிருஷ்ணவேணி வலியுறுத்தியதாவது:- பலவித காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நல்ல நீரில் மட்டுமே உருவாகிறது. இதனால் வீடுகளைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் பயனற்ற பொருள்களின் மீது மழைநீர் அல்லது கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன் சுற்று புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனவே தண்ணீர் தொட்டி, மழை நீர் தேங்கும் பயனற்ற ஆட்டுக்கல், உரல், அடுக்கி வைக்கப்பட்டுள்ள பயனற்ற வாகன டயர், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்காய் சிரட்டை ஆகியவற்றில் வீடுகளை சுற்றி தண்ணீரை தேங்க விட வேண்டாம். நீர் கலன்களை நன்றாக மூடி வைத்து சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுபுழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tags

Next Story