வெள்ளகோவிலில் டெங்கு கொசுப்புழு ஒழிக்கும் பணி
வெள்ளகோவிலில் டெங்கு கொசுப்புழு ஒழிக்கும் பணி
வெள்ளகோவில் நகராட்சி 21 வார்டுகளிலும் கொசுப்பு ஒழிப்பு பணியாளர்களைக் கொண்டு வீடு வீடாக சென்று நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், குடுங்கள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுப்பு உள்ளதா என கண்டறிந்து அபெட் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.சாலை ஓரங்கள் காலியிடங்களில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் சுகாதார அலுவலர்கள் பொதுமக்களுக்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதியில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் சுகாதாரப் பணிகளை நேற்று ஆய்வு செய்து நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.