டெங்கு கொசு ஒழிப்புப்பணி தீவிரம்
வெங்கரை பேரூராட்சியில் நோய்த் தொற்றை தடுக்கும் பொருட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தொகுதி வெங்கரை பேரூராட்சியில் தொற்று நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் தொற்றுநோய்களால் காவிரிக் கரையோர பகுதிகள் தான் அதிகம் பாதிக்கின்றன. அதைத் தடுக்கும் பொருட்டு வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜயகுமார் மேற்பார்வையில் பாண்டமங்கலம், கொளக்காட்டுப்புதூர், தேங்குபெருமாள்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பேரூராட்சி பணியாளர்கள் கொசுப் புழுக்களை அழிக்க அபேட் மருந்து தெளித்து கொசுப் புழுக்களை அளித்து வருகின்றனர்.
Next Story