டெங்கு தடுப்பு: மதுரையில் ரூ.24,000 அபராதம்

டெங்கு தடுப்பு: மதுரையில் ரூ.24,000 அபராதம்

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் ரூ. 24, 000 அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் ரூ. 24, 000 அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் மதுபாலன், உத்தரவின்படி மாநகராட்சி 100 வார்டுப் பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு கொசு புழு உற்பத்தியை அழித்தல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் மேயர்,ஆணையாளர் ஆகியோர் தலைமையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக திடீர் களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5 மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் குழுவின் மூலம் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து (13.12.2023) அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் (13.12.2023) அன்று மண்டலம் 1க்கு உட்பட்ட பகுதிகளில் 94 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தேவையற்ற 109 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3700 அபராதமும்,மண்டலம் 2 க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 38 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தேவையற்ற 83 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7500 அபராதமும், மண்டலம் 3 க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 87 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தேவையற்ற 125 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4500 அபராதமும், மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 89 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தேவையற்ற 181 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2000 அபராதமும், மண்டலம் 5க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 106 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 81 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஐந்து மண்டலங்களில் இருந்து மொத்தம் 414 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 579 தேவையற்ற டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ.24,200 அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்று தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டால் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மதுரை மாநகராட்சியால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story