கொசு தொந்தரவு அதிகரிப்பால் டெங்கு அபாயம்
பழநி நகர் மற்றும் பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி மற்றும் ஆயக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக கொசு தொந்தரவு அதிகரித்துள்ளது.
பழநி நகர் மற்றும் பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி மற்றும் ஆயக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக கொசு தொந்தரவு அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலேயே அதிக அளவிலான கொசுக்கள் கடிக்கின்றன. தற்போது டெங்கு காய்ச்சல் சீசன் என்பதால், கொசுக்களின் தொந்தரவால் பொதுமக்கள் பெரும் பீதிக்குள்ளாகி உள்ளனர்.
எனவே, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நாள்தோறும் சுழற்சி முறையில் வீடுகள், தெருக்கல் மற்றும் சாக்கடைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.மேலும், சுகாதார பணியாளர்கள் மூலம் வீடுகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். சாக்கடைகள் தேங்கி நிற்காத அளவிற்கு வடிகால்களை தூர்வார வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.