இறுதி வாக்கு நிலவரம் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அனுமதி மறுப்பு

இறுதி வாக்கு நிலவரம் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அனுமதி மறுப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்களை

கரூரில் இறுதி வாக்கு நிலவரம் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்த துணை இராணுவத்தினரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமாக கரூரை அடுத்த தளவாய் பாளையம் பகுதியில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வந்தது. காலை முதல் இரவு 9 மணி வரை ஏறக்குறைய 22 சுற்றுகள் வாக்கு பதிவு எண்ணிக்கையை செய்தியாளர்கள் எதிர்கொண்ட நிலையில்,

இறுதிச்சுற்று வாக்குப்பதிவு நிலவரத்தையும், வெற்றி பெற்ற வேட்பாளர் சான்றிதழ் பெறும் நிகழ்வை புகைப்படம் மற்றும், ஒளிப்பதிவு செய்ய சென்ற செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவு கலைஞர்களை அரங்கிற்கு உள்ளே விடாமல் துணை இராணுவத்தினர் தடுத்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும் இதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

தாங்கள் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வந்துள்ளோம் என தேர்தல் ஆணையம் அளித்த ஆவணத்தை காட்டி தெரிவித்த பிறகும் அனுமதிக்க மறுத்ததால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய செயல்பாட்டை கண்டித்து,

வாக்கு எண்ணிக்கை மையமான தளவாய் பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி வாயிலில் அமர்ந்து செய்தியாளர்கள் புகைப்பட கலைஞர்கள் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கையை பெற முடியாத நிலையும் ஏற்பட்டது.

Tags

Next Story