ராமநாதபுரம் ராமேஸ்வரம் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு

பிரதமர் வருகையை முன்னிட்டு ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் பக்தர்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு பாதுகாப்பு நலன் கருதி தரிசன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்கு புண்ணிய தீர்த்தங்களை எடுத்துச் செல்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேக்கரும்பு அருகே உள்ள அமிர்த வித்யாலயா பள்ளியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபாடில் இன்று ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கி அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சரியாக 3:30 மணியளவில் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடி கோவிலுக்குள்ளே 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார் பாரத பிரதமர் வருகையை ஒட்டி ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் சுமார் 3500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தரிசன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சாலை மார்க்கமாக இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது மேலும் கனரக வாகனங்கள் உள்ளே வர அனுமதி இல்லை மேலும் இதே போல பிரதமர் ஜனவரி 21ஆம் தேதி நாளை தனுஷ்கோடி செல்ல உள்ள நிலையில் இன்று பகல் 12 மணி முதல் நாளை பகல் 12:00 மணி வரை தனுஷ்கோடி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது மேலும் ராமேஸ்வரம் தீவு பகுதியில் ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டிரான் கேமராக்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது பாரத பிரதமர் வருகை ஒட்டி ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் காவல்துறை சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் ராமேஸ்வரம்ர் கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags

Next Story