தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னதானம் வழங்க நேற்று அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.


தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னதானம் வழங்க நேற்று அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னதானம் வழங்க நேற்று அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அரசு போக்குவரத்துக் கழக ஜெபமாலைபுரம் நகர கிளைத் தொழிலாளர்கள், தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து 20 ஆண்டுகளாக மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சித்திரை பவுர்ணமியான நேற்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

இதையொட்டி, அன்னதானம் பெறுவதற்காக பக்தர்களும் வரிசையில் காத்திருந்தனர். அன்னதானம் தொடங்க இருந்த நிலையில், அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் வந்து, கோயில் வளாகத்துக்குள் அன்ன தானம் வழங்கக் கூடாது என்றும், அனைத்துப் பொருட்களையும் உடனே அப்புறப்படுத்துமாறும் கூறியுள்ளனர். இதையடுத்து, பெரிய கோயில் எதிரேயுள்ள வாகன நிறுத்துமிடத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னறிவிப்பின்றி, அன்னதானம் வழங்க திடீரென அனுமதி மறுக்கப்பட்ட தால், பக்தர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து ஏஐடியுசி சம்மேளன மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் கூறியது: பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக மாதந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அப்போது, எதுவும் கூறாத அரண்மனை தேவஸ்தான நிர்வாகம், திடீரென தற்போது அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பது ஏன்? அன்னதானம் பெற மக்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது மனிதாபிமான மற்ற செயல். பெரிய கோயிலில் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், பவுர்ணமி நாளில் வழக்கம் போல அன்னதானம் வழங்க அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story