மே தின பேரணிக்கு அனுமதி மறுப்பு- ஏஐடியுசி ,சிஐடியு கண்டனம்

மே தின பேரணிக்கு அனுமதி மறுப்பு- ஏஐடியுசி ,சிஐடியு கண்டனம்

மே தின பொதுக்கூட்டம்

தேர்தல் நடத்தை விதிகளை அரியலூரில் மே தின பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு ஏஐடியுசி ,சிஐடியு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமைத் தினமான 138 வது மே தினத்தையொட்டி மாவட்டத் தலைநகர் அரியலூரில் சிறப்பான பேரணி பொதுக்கூட்டம் நடத்திட ஏஐடியூசி - சிஐடியு ஏற்பாடு செய்திருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி வருவாய் கோட்டாட்சியர் மே தின பேரணி - பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மே தின பேரணி - பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கி நடைபெற்றுள்ள நிலையில் அரியலூரில் மட்டும் வருவாய் கோட்டாட்சியரின் தாந்தோன்றித்தனமான போக்குக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனை காரணம் காண்பித்து காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் பேரணிக்கு திரண்டு வந்திருந்த தொழிலாளர்கள் பேரணி துவங்கும் அண்ணாசிலை முன்பாகவே பொதுக்கூட்டமாக நடத்தினர் கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் த. தண்டபாணி தலைமை வகித்தார். சிஐடியுசி R.சிற்றம்பலம், க. கிருஷ்ணன், ஏஐடியுசி ரெ.நல்லுசாமி, ஜி. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சிஐடியு தோழர் வி.அமிர்தலிங்கம் அவர்களும் ஏஐடியூசி மாநில செயலாளர் தோழர் ஆர். தில்லைவனம் அவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் P.துரைசாமி நன்றி கூறினார்.

கூட்டத்தில் திருபுரந்தான் ஊராட்சி மன்ற தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளருமான இரா. உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், சிபிஐ மாவட்ட செயலாளர் சொ. இராமநாதன், அரியலூர் நகராட்சி ஏஐடியூசி க. பெருமாள், வெங்கடேசன், மு. அமிர்தவள்ளி,ம. கோபி, ரா. தனலெட்சுமி, நீ.சூர்யா, T.ஆறுமுகம், k. நாகூரான், நாகராஜன், ஜெயங்கொண்டம் நகராட்சி ஏஐடியுசி சிவக்குமார், பா. ஜெயா, பு.லெட்சுமி, நாகமுத்து, ச.கொளஞ்சி, S.மணிகண்டன், லோகநாதன், கட்டிடத் தொழிலாளர் ஏஐடியுசி T.ஜீவா, முருகேஸ்வரி, பானுமதி, அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை தார்பாய் கட்டும் ஏஐடியூசி பெ.பார்த்திபன், அரியலூர் மகளிர் குழு கு.வெள்ளையம்மாள், மா. நல்லம்மாள், க. லெட்சுமி, ரா.ராணி, இளைஞர் பெருமன்றம் பெ.மணிகண்டன், கு. விக்னேஷ், தூய்மை காவலர்கள் பாப்பாத்தி, S. சித்ரா, M.பரிமளா, பம்பு ஆப்ரேட்டர் சி.பன்னீர்செல்வம், R.மருதமுத்து, ரேவதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா.பலூர் ஒன்றியம் G.சக்கரவர்த்தி, ரெங்கசாமி, ஜெயங்கொண்டம் ஒன்றியம் மணிவண்ணன் அரியலூர் ஒன்றியம் ராயதுரை, து.பாண்டியன், பிச்சைபிள்ளை, திருமானூர் ஒன்றியம் G. மருதமுத்து, சின்னதுரை, கல்யாணசுந்தரம், மந்திர வேல், ஆண்டிமடம் சு.கவர்னர், செந்துறை ஒன்றியம் k. சிவக்குமார், கொளஞ்சி, பொன்னம்மாள் உட்பட ஏஐடியுசி - சிஐடியு தோழர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் காலை 10 மணி அளவில் அரியலூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு சிபிஐ கொடி AITUC கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story