சிவகாசி அரசு மருத்துவமனையில் பல் எக்ஸ்ரே பிரிவு தொடக்கம்

சிவகாசி அரசு மருத்துவமனையில் பல் எக்ஸ்ரே பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அரசு மருத்துவமனையில் பல் எக்ஸ்ரே பிரிவு தொடக்கம்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே,சிடி.ஸ்கேன்,டயாலிசிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.சிவகாசி மற்றும் சுற்று கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனா்.அரசு மருத்துவமனையில் பல் மருத்துவம் பாா்க்க தனிப்பிரிவு இருந்தும் போதிய உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகளின் பற்களை பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில் பல் மருத்துவப்பிரிவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.8 லட்சம் செலவில் வாங்கி கொடுக்கப்பட்டது.

மேலும் இந்த நிறுவனம் சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கண் சிகிச்சை பிரிவிற்கான உபகரணங்ளும் வாங்கி கொடுக்கப்பட்டது.இதில் பல் எக்ஸ்ரே பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஏ.பி.செல்வராஜன் பல் சிகிச்சை பிரிவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.இதில் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் அய்யனார் உட்பட ஏராளமான டாக்டர்கள்,நர்சுகள் கலந்து கொண்டனர்.வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இங்கு பல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது வாரத்தில் 6 நாட்களும் அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story