விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை திட்ட விளக்க கூட்டம்

விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை திட்ட விளக்க கூட்டம்

திட்ட விளக்க கூட்டம் 

கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் ஆத்மா திட்டம் மூலம் கிராமங்களில் 'கலாஜதா' எனும் கலைநிகழ்ச்சிகள் மூலம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை திட்ட விளக்க கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் யமுனா கவாஸ்கர் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு திருக்கோவிலுார் கலைக் குழுவினரின் சார்பில் ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் எடுத்து கூறப்பட்டன. வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலை இடுபொருட்கள் வழங்கல். இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி முறை. பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர்பாசன திட்டங்களில் அரசின் மானியம் ஆகியன குறித்து எடுத்து கூறப்பட்டது. ஆத்மா திட்டம் மற்றும் அதன் மூலம் நடைபெறும் விவசாயிகள் பயிற்சி கண்டுணர் சுற்றுலா பண்ணை பள்ளி செயல்விளக்க தளை அமைத்தல் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. நிகழ்ச்சியினை ஆத்மா அலுவலர்கள் சைமன், சக்திவேல், மணிவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பழனிசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story