வேலூர்: நாளை வைப்புநிதி குறைதீர்வு முகாம்

வேலூர்: நாளை வைப்புநிதி குறைதீர்வு முகாம்

 வைப்புநிதி குறைதீர்வு முகாம்

குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் வைப்பு நிதி குறை தீர்வு முகாம் நாளை நடைபெற உள்ளது.

மத்திய தொழிலாளர் அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் (நிதி ஆப்கே நிகட்-2.0) நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் நடத்தவும், இதனை வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைதீர்வு முகாம் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி இந்த மாதத்துக்கான (ஜூன்) வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் நிகழ்ச்சி விலக்கு அளிக்கப்பட்ட ஸ்தாபனம் என்ற மையப்பெயரில் வேலூர்மாவட்டத்தில் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது. இதில் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குதல், ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளை கூறுதல், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல், உறுப்பினர், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என வேலூர் மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் ரித்தேஷ் பக்வா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story